Author name: admin

daily post

06 November 2026

இச்சை முதல்படி காமதேனு .. என்பார். இச்சை ஒழுங்குற்றால் கற்பகம் .. என்பார்கள். இச்சை உயர்நிலை சிந்தாமணி .. ஆகும். இச்சை நிலைக்கேற்ற இம்மூன்று பேர்பெறும்.

daily post

05 November 2026

இச்சையைப் புள்ளியாய் நிறுத்தப் பழகிடு! இச்சை விரிந்தால் ஆராய்ச்சி ஆக்கிடு. இச்சை விரிந்து பேராதார நிலை எய்த, இச்சை புலன்களை வென்று நிலைபெறும்.

daily post

04 November 2026

இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை. இச்சை ரசிப்பது, எண்ணுதல் அறிவாகும். இச்சைப் பொருள்வரை இயங்க ஐயுணர்வாகும் . இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்!

daily post

03 November 2026

இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும். இச்சையே காம முதலான அறுகுணம், இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது? இச்சையே நீ, நான், இவர், அவர், என்பதும்!

daily post

02 November 2026

இச்சை என்பது உயிரினப் பெருநிதி. இச்சை இயக்கமே வாழ்வு எனப்படும். இச்சையின் தோற்றம் விளைவை அறியாதோர், இச்சையை இழிவாக்கிப் பழிக்கின்றார்!

daily post

30 October 2026

இச்சை வேகமே மீறிட மீறிட இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப் பார்! இச்சை வேகமும், இச்சிக்கும் வேகமும், இச்சித் தறிந்திட இரண்டும் நீ! அவ்விடம்.

daily post

29 October 2026

இச்சை தோன்றும் சுயமாகவும் பிறர் இச்சையும் உன்னுள் பிரதி பலித்திடும். இச்சை எழும்போதே ஆய்வார் அறிவார்கள், இச்சை இச்சையை ஆளும் திறன் காண்போர்.

daily post

28 October 2026

இச்சை குறுகிடில் அறுகுணம் ஆகிவிடும். இச்சையின் பூரணம் நிற்குணம் ஆகிடும். இச்சையின் தத்துவம் முழுதும் உணர்ந்திடில், இச்சை ஈசன் இரண்டும் ஒன்றாம் அங்கே!

daily post

27 October 2026

இச்சையே ஒரு நாடக மன்றம் போல் இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும் இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம் இச்சையே அதன் நிர்வாகி உடையவன்.

daily post

26 October 2026

இச்சை யார்? நீயார்? இரண்டா? ஒன்றா? சொல்லு! இச்சை எங்கே? நீ எங்கே? எதோ பிரி! இச்சையாக இருக்கிறாய் நீயேதான்! இச்சை வேறென்று எண்ணி மிரள்கிறாய்.

Scroll to Top