daily post

daily post

09 October 2026

8gwSxLHiTkA இச்சித்த பயனாக இதுவரை கண்டதென்? இச்சை சுகதுக்கத்து அப்பாலும் உள்ளதோ? இச்சையின் காரணம் என்ன? வினவிக்கொள்! இச்சை இருப்பு இயல்பியக்கம் தோன்றும்.

daily post

08 October 2026

wfl7R38rZ1Q இச்சை இரத்தச் சுழலில் பிறந்திடும்! இச்சை ஒழிந்திடும் இச்சுழல் நின்றபின், இச்சையின் சக்தியை, இச்சையில் சேமிக்க, இச்சை உயர்ந்திடும்; இன்பம் பெருகிடும்!

daily post

07 October 2026

rawdGrlRcOc இச்சை தொடர்புறும் இடமொக்க இயங்கிடும், இச்சையின் பலனாகும் இன்பமும் துன்பமும். இச்சையின் மூலத்தில் முடிவில் இதே சிவம். இச்சைத் தத்துவம் இயற்கையின் உச்சமாம்!

daily post

06 October 2026

FguwKwfrXHw இச்சை என்பது இயற்கை எழுச்சியே! இச்சிப்பதே ருசு இயங்கும் உடலுக்கு. இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி. இச்சித்து அனுபவித்து இச்சை இயல்பைப்பார்!

daily post

05 October 2026

ydBBMfgHZkg இச்சை என்பது தேவையுணர்வாகும் இச்சை மீறச் செயல் வேகமாகிவிடும் இச்சை செயலில் இணைந்திடும், மீறிடும் இச்சை பழக்கத்தால் எண்ணங்களாகிடும்.

daily post

02 October 2026

3ZH8V-wiq3g இச்சை இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம் இச்சைக்கடங்காமலே உடல் மாய்ந்திடும் இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும் இச்சை ஒழித்திட ஏன் முயல்கின்றீர்கள்?

daily post

01 October 2026

j2PCnIwshfQ எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம். நல்லதோர் உணவினை நமக்கே அளித்தோர் வாழ்க வளமுடன்! உலக உயிர்களெல்லாம் வாழ்க! வாழ்க! வாழ்க வளமுடன்! காயகற்பக்கலை கற்றோர் அனைவரும்

Scroll to Top