
அறிவின் நான்கு நிலைகள்
அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து
அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று
அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம
அணுவான உயிர்நிலையை உணரவேண்டும்.
அறிவங்கே உயிராகும் துரியமாகும்
அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்
அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ
அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி.