
அறிவின் முழுமைப்பேறு
தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்
தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று
தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்துகொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றி
திருத்தமுடன் உரைப்போர் யார்வாரீர் சொல்வேன்.