
முழுமையும் அமைதியும்
அறிவு ஆளும் நிலையை எய்த பின்னர்
அதுமுழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவிற்கு அமைதிகிட்டா; அவ்வப்போது
அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் அறுகுணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதன் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்.