
பிறவிக்கடல் கடக்க
பிறப்பு இறப்பு எனும் கடலை நீந்த வென்றால்
பெருவிழிப்பாய் இருவழியில் வெற்றிவேண்டும் –
பிறப்பு எழாமல் புதிதாய்க் கருவின் மூலம்
பேணிப் பாலுறவு அறவே தடுக்க வேண்டும்;
பிறப்பதனைப் பெருக்குகின்ற தன்முனைப்பு
பெரும்பாவப் பதிவுகளும் பற்றும் போக்கி
பிறப்பறுக்கும் அகத்தவமும் அறமும் ஆற்றி
பேரறிவாய் அறிவறிந்து நிலைக்க வேண்டும்.