
பிறவிக்கடல் கடக்க
இளமையிலே தவம் ஏற்று மணம் தவிர்த்து
இனிய தொண்டாற்றுவது முதலாம் மேன்மை;
இளமையிலே தவம் ஏற்று மணம் புரிந்து
இல்லறத்தை நடத்துவது அடுத்த மேன்மை;
இளமையிலே தவமின்றி மணம் புரிந்து
இனிய மக்களைப் பெற்று அனுபவித்து
இளமையிலே தவறவிட்ட தவத்தை ஏற்றல்
இனம் மூன்றாம் ஆன்மீக மேன்மை காண.