
அறிவின் அமைதி
இறைவனது திருநிலையோடு இணைந்த போது
இன்பதுன்ப உணர்வுகளைக் கடந்துயர்ந்து
மறைபொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதிபெறும்; அது பேரின்ப மாகும்;
நிறையறிவுநிலை ஈதே இந்தப் பேற்றை
நினைந்தோ மறந்தோ உலகில் மனிதன் அந்தத்
துறைநோக்கி வாழ்க்கைக் கடல் நீந்துகின்றான்.
துணைகுருவே வழி அறமும் தவமும் ஆகும்.