
ஆன்மாவே சிவம்
அகத்ததுவே தெய்வம் அதன் இயக்க மேன்மை
ஆன்மாவெனும் உயிராம் புலன்கள் மூலம்
அகம்படர்ந்து பலவடிவம் குணங்களாகி
அனுபவிக்கும் இன்பதுன்பம் மயக்கம் ஈதே
அகத்தவத்தால் அறிவு ஒன்றப் பழகும் போது
அமைதிநிலை கிட்டும். அங்கே உண்மை தோன்றும்.
அகத்தாய்வு வினைத்தூய்மை மனத்தில் தூய்மை
அளித்துயர்த்தும் அங்கான்மா சிவமாய் நிற்கும்.