
அறிவறியக் கருதவத்தை அனைத்துலகுக் களித்து
அல்லல்தரும் இருவினைகள் பதிவுகளை மாற்றும்
நெறிவிளக்க அகத்தாய்வு நேர்முறையும் தந்தேன்
நிலையான பயன் காண மெய்விளக்க மன்றம்
சிறியவர்க்கும் பெரியவர்க்கும் சிந்தனையைத் தூண்டிச்
சீர்தூக்கி விளைவறிந்து விழிப்புடனே ஆய்ந்து
பொறிகள்தமை ஆளுமுறை செயலளவில் காண
புத்துலகு ஆன்மீகப் பொலிவோடொளி வீசும்.