04 September 2026

நல்ல உயர் சிந்தனைக்கும் ஞானம் பெற ஐயுணர்வை வெல்லவும் நல்லாறறிவாய் விந்தை உடல் தந்த இறை இல்லையா உண்டாவென்று எழுகின்ற வாதங்களில் இழைத்துணியில் பாவாய் நூலாய் இருப்பது போல் பின்னியுள்ளான். எங்கெங்கும் என்னுள்ளும் எல்லாத் தோற்றங்களிலும் இடையற்ற மறை பொருளாய் இருந்து பேரண்டமெங்கும் தங்கித் தழைத்தே இயங்கும் தற்பரத்தை யானுணர்ந்தேன் தனித்து மனத்துள் நிலைத்துத் தவமாற்றும் சாதனையால்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top