Tj8yfW05jTY
பெண்ணினத்தை அவமதித்துப்பெருமை பெற
நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப் பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண் பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
இன்பமுற்றார் இவ்வுலகில் இறைவனைப்போல்
என்றுமுள்ளார்.
உயிர்கள்தமை வெளியிட்டு உயிர்க்குயிராய் உள்நிறைந்து
உணர்வாயும் அறிவாயும் உலகில் பல்லுயிர் வாழப்
பயிர்வகைகளாய் நிறைந்த பரங்கருணையானு ணர்ந்தேன்
பல்லுயிரும் இன்பமுறப் பல்வளங்களாய் நிறைந்தான்.