
சூட்சுமமாய்க் குறுகி நின்று தொடங்கியது தன்வளர்ச்சி
சொல்லரிய மறை பொருளாய்த் தொடர்ந்து வரும் வினைக்கேற்ப
ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்
அன்னைக் கருப்பை விடுத்து அடைந்து விட்டேன் மண்ணுலகை.
எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே
வாழ்ந்துவரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்?