
பேரின்பக் களிப்பு
மண்ணான இவ்வரிய மாபெரிய உலகமிசை
மனமுடைய மிகச்சிறிய மனிதவுரு வாழுகின்றேன்
எண்ணரிய ஆயிரங்கள் எண்ணங்கள் என்னுளத்தே
எழுகின்ற விந்தையினை யார் அறிவார், யார் அறிவார்?
சின்னஞ்சிறு சிறு செல்கள் சேர்ந்திணைந்து ஒத்துழைத்து
சிந்தனைக்கெட்டாச் செயல்கள் சிறப்புடலில் நிகழ்த்துவன
முன்னம் ஒரு துளியான மூலவிந்து நாதத்தால்
முழுமையாய் எனது உடல் முற்றறிவன் திருவருளால்.