
நான் எனும் எழுச்சியை நாடி ஆராய்ந்திட
நான் முதலில் மனமாகப் பிடிபடும்
நான் மனத்தின் மூலம் நாட அங்குயிராகி
நான் உயிர் மூலத்தில் நற்சிவமாய் விடும்.
நான் யார் எனும் வினா நல்லுயிர்ப்பு அறிவிற்கு
நான் அகம்பாவமாம் குறுகிய நாட்டத்தில்
நான் பேரறிவாகும் நற்றவ ஆழ்வினில்
நான் முழுமைபெற நலிவில்லா மெய்ப்பொருள்.