20 August 2026

மன நிலை

மனம் புலன் உணர்வினில் மயங்கிட மாயை ஆம்

மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட

மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்

மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே.

மனம் மாய என்பார்கள் மனநிலை மாற்றத்தை

மனம் மாய்வதே இல்லை மனம் மெய்ப் பொருளாகி

மனமே அறிவாக மறுபிறப்பு எய்திடும்

மனம் அறிவான பின் மரணமில்லா நிலை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top