
இல்லற நோன்பு
அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம்வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாம் நோய்கள் வரும்தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்.
தன்புகழ் விளங்கும் நல்லதரமுடைய மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை.