
வழங்கி வாழ்வோம்
மருத்துவம், உளவியல், விஞ்ஞானம், ரசவாதம், ஆன்மீகம் ஆம்
மதிப்புடைய இத்துறைகள் எதுஒன்றில் மனிதனவன்
உயர்ந்தபோதும்
கருத்துயர்த்தி அவ்வறிவு மக்கள் வாழ்வினிலே புகுத்தி நன்மை
காணாத போததனால் உலகத்துக்கெவ்விதத்தும்
நன்மையில்லை.
திருத்தமிலா தன்முனைப்பு ஓங்கி தற்பெருமைகளைப் பேசப் பேச
தனக்கு நட்பு சமூகத்தில் குறைந்து குறைந்தே தேய்ந்து தனியனாக்கும்
வருத்தமே அவர் வாழ்வில் மேலோங்கும் ஞானம் வரா வாழ்ந்து கண்ட
வாழ்க்கை உண்மை இதுதான் வழங்கி வழங்கி
வாழ்வோம் வாழவைப்போம்.