22 July 2026

அறுகுண சீரமைப்பின் நல்விளைவு

பேராசை கவலை சினம் அழுக்காறு விட்டால்

பேரறிவாய் விரிவடையும் மனது தரம்மாறி

ஓராசை உளத்திலெழ ஒத்த நுட்பத்தோடு

உடல், உறவு, சமுதாயம், இயற்கை நான்கின் இனிமை

சீராக காத்து ஆற்றும் சிறப்பு இயல்பாகும்.

சிந்தனையின் உயர்வினிலே விழிப்புடனே வாழ

யாராசையும் இதனால் அறிவறிய ஓங்கும்

எப்போதும் அமைதி இன்பம் நிறைவு பெற்று வாழ்வோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top