
மனநிறைவு
எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றி தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மனவலுவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்