20 July 2026

உயர்ந்த அகத்தவம்

நிறைவடைந்த குருமூலம் நேர்முகமாய்க் குண்டலினி

யோகம் கற்று

நித்ததவம் ஆழ்ந்தாற்றி உண்மை உணரப்பெற்றால்

முனைப்பு போகும்

இறைவனது பகுதிநிலை உயிர் மனமாய்த் தேர்ந்து

அதன் உறைவிடமாம்

உடலதுவோ சமுதாயம் உற்பத்தி செய்து பல

பொருட்களீந்து

முறையாக வளர்த்துப் பண்பாட்டுடனே கல்வி தொழில்

காப்புதந்த

முழுக்கதையும் சிந்தனையின் முதிர்ச்சியினால் உணர்ந்து

வினைப்பதிவாய்ப் பெற்ற

கறைநீங்க உயிரதனை இறைநிலைக்கும் கனஉடலைச்

சமூகத்திற்கும்

கனிவுடனே அர்ப்பணிக்கும் தகைமை வரும் இந்நிலையே

முழுப்பேறாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top