
வினைப்பதிவின் விளக்கமே உடல் உயிர் அறிவாம்
மரத்தினது தன்மையெல்லாம் வித்தில் அமைந்துளவே
மரமது தன்வித்தினது பருவுருவ தோற்றம்
தரத்திலுயர் மனிதஉரு தன்கருவாம் உயிரின்
தரப்பதிவின் வெளிப்பாடே கூட்டல்குறைவில்லை
பரத்தியல்பால் சூக்குமமே தூலமாய் விளங்கும்
பழைய கதைகள் இதனைத் திரித்து மாற்றிக்கூறும்
உரத்த குரலில் பேசி உண்மை மறுப்பார்கள்
உயிர் உடலின் தொடர்பறியார் உன்னுள் ஆய்ந்து தேர்வீர்