
இன்முகத்தோடும் எல்லார்க்கும் உதவி செய்வோம்
தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலைப் பிறரை குறைகூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துள்ள
நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாய்
நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்