
நல்ல உள்ளம் பண்பட்ட குடும்ப மேன்மை
நாடறிந்த புகழ் வாழ்க்கை அமைந்துள்ளோர்க்கும்.
மெல்ல ஒருநபர் மீது பொறாமை வந்தால்
மிகுந்து அது உள்ளத்தை நச்சு ஆக்கி
செல்லரித்த புத்தகம் போல் சீர்மை கெட்டு
செயல் திறனைச் சிறக்கவிடா துண்மை கண்டோம்
வல்ல மனவளக்கலையைப் பயில்கின்றோரே
வாழ்த்துகின்றேன் வாழ்வீரே பொறாமைவிட்டு