
தூய்மையெனில் பழிச்செயல்கள் பதிவு நீக்கம்
துன்ப அனுபவமாக இயற்கை நல்கும்
ஆய்வு தனக்குள் ஆற்றி அகத்தே நிற்கும்
அறிவு ஒளியில் அறத்தின் நெறி விளங்கும்
தேய்வு பெறும் பவவினைகள் இதையுணர்த்தும்
திருவிளையாடற் குறிப்பே அன்பர் தூற்றல்
ஓய்வு உளத்தில் கொண்டு வாழ்த்தி வாழ்த்தி
உளமகிழ்வைப் பழிப்போர்க்கு அர்ப்பணிப்போம்
258