
உண்மை உணர்வு
என்னை அறிமுகம் செய்கின்றேன்
தான் தனது எனும் எண்ண எழுச்சி ஊக்கும்
தன்முனைப்பை மாற்ற தவம் பலநாள் செய்தேன்
நானவனாய் அறிவினது முடிவில் கண்டேன்
நலமெண்ணி நலம் செய்து வாழக் கற்றேன்
ஊன் உடலே நான் என்று குறுகி நிற்போர்
உரைக்கும் வசைமாரி யெல்லாம் உயர்வாழ்த்தாச்சு
ஏன் வருந்த இரக்கமுடன் பழிப்போர் தம்மை
எப்போதும் வாழ்த்தி வாழ்த்தி இன்பம் துய்ப்போம்