26 June 2026

பிறர் திணிக்கும் கருத்தை ஏற்பதா துறவு

பிச்சையெடுத்துண்டு வேதாந்தம் பேசி

பிழை செய்தே உயிர் வாழும் துறவு வேண்டேன்

அச்சமின்றி உழைத்து ஈட்டி உடலை ஓம்பி

அறம் நின்று அறம் உணர்த்தும் நெறியில் வாழ்வேன்

எச்செயலும் சிந்திக்காதாற்றுவோர்கள்

என்னை ஏழ்மை நிலையேற்று வாழச் சொன்னால்

உச்ச அறிவின் நிலையில் உலகில் வாழ்வோர்

ஒப்புவரோ பிறர் திணிக்கும் ஈனப்போக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top