
மெய்விளக்கம்
உணர்ச்சிகளால் எல்லைகட்டி உளவேகத்தால்
உருவெடுத்தும் உருக்குலைந்தும் அலைந்தியங்கும்
உணர் ஆற்றல் மனம் என்போம் உடலை ஒட்டி
உள்நோக்கி அம்மனமே உயிரின் உண்மை
உணர்நிலையில் அறிவென்போம் உற்றுணர்ந்து
உயிர் மூலம் சிவமென்ற உண்மை காணும்
உணர்வினலே பரமென்போம் ஒன்றே மூன்றாய்
உருவம், உயிர் பரம் இணைந்த உணர்வே ஞானம்.