
விழிப்பு நிலை சீவன்முக்தி
செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர்! இதனைவிட வேறு நீ யார்?
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்