
மோகம்
தகப்பனுடைய ஒருகழிவைத் தாயார் ஏற்று
தன்கழிவை அதனோடு சேர்த்துச் சேர்த்து
மிகப்புனித மெனும் இந்த உடலை ஈந்தாள்
மீண்டும் அவள் உடல் கழிவைப் பாலாய் உண்டோம்.
சுகப்பிணைப்பின் அடையாளமான இந்தச்
சுக்கில சுரோணிதம் சேர்ந்து உருவாய் வந்த
முகப்பினையே உடல் வளர்ச்சி பெற்ற பின்னர்
முன் நினைவால் நாடுவதே மோகமாகும்.