
மதம்
அறிவொடு சுகாதாரம் பொருளாதாரம்
அரசியல் விஞ்ஞானம் அனைத்தும் சேர்த்து
நெறியோடு இயற்கையின் இயல்பறிந்து
நேரிடும் சந்தர்ப்பங்கள் காலம் ஒக்கச்
சிறிது பெரிதாய்த் தோன்றும் வாழ்க்கைச் சிக்கல்
சிந்தனையால் தீர்க்கும் பல உட்கருத்துச்
செறிவுள்ள திட்டங்கள் எல்லாம் ஒன்றாய்ச்
சேர்ந்த ஒரு தொகுப்பன்றோ மத ஒழுக்கம்