
நிறை உணர்வு
உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்
செய்த வினைப்பதிவுகளைத் தூய்மை செய்து கொண்டேன்.
கருத்தெடராய்ப் பின்பிறவி இல்லை இனியில்லை
கர்ம வினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள்நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப்பெரு நந்நாளை எதிர்பார்த்து உள்ளேன்.