
தூய்மை
கருவழியே எனக்கேதும் பிறவித் தொடரில்லை
களங்கமெனும் தன்முனைப்பு, பழிச்செயல் மயக்கம்
திருவருளோடறிவை இணைத்தாற்றும் கர்மயோகச்
சிறந்த நெறியால் மாற்றித்தூய்மை செய்து கொண்டேன்.
பெருவாழ்வாம் மெய்யுணர்ந்த அயராத விழிப்பில்
பேரண்டத்தோடுயிரை இணைத்து ஆற்றும் தவத்தால்
மருளொழிந்த மனநிலையில் அமைதிகண்டு கொண்டேன்.
மனிதகுலம் உய்வதற்கே அருட்தொண்டு ஏற்றேன்.