
இனிப் பிறவி இல்லை
திருவருள் தன்மை
அருளமுதம் பெறவேண்டி அகத்தவம் புரிந்தேன்.
அறிவதனில் மூன்று நிலையற்புதம் உணர்ந்தேன்.
திருவருளாம் தெய்வநிலை ஆதி வெளியாச்சு
தேர்ந்து கொண்டேன் அந்தத் திருவருளின் தன்மை
இருநெறியாம் அறிவு அசை வென்னும் மறை பொருளாய்
இணையற்ற இப்பொருளே மெய்யும் உயிராக
உருவவழி கருவழி யென்றிரண்டு பிரிவாகி
உலகங்கள் உயிர்வகைகள் மனிதனுமாய்க் கண்டேன்.