
மோனத்தின் பெருமை
மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்.
மிகவிரிவு எல்லையில்லை காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதிண்டாம்.