15 April 2026

மோனத்தில் பிறந்த ஞானப் பாக்கள்

பூரணம்

மவுனத்தில் எனை அமர்த்திமனத்தை உள்ளுள் ஈர்த்து

மாபெரிய பேரண்ட ரகசியங்கள் தம்மை

மவுனமாக உணர்த்திவிட்டாய் ‘மா’ அறிவாய் நின்று

மற்றும் நான் எனது வாழ்வில் கடமை தேர்ந்து ஆற்ற

மவுனத்தில் எனக்களித்த அறிவுரைபோல் சிறிதும்

மலைக்காது பிறழாது உலகத் தொண்டு செய்வேன்;

மவுனமதாய் அறிவினது பூரணமாய் மாந்தர்

மனத்துக்கு உட்பொருளாய் விளங்கிடும் பேரறிவே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top