
மோனமும் எண்ணமும்
மோனத்தில் வாய்மூட எண்ணம் தோன்றும்
முனைந்தவன் யார்? முடிவு எங்கே? வளைத்தாராய
மோனநிலை திரிந்ததனால் எண்ணமாக
முனைந்துள்ளேன் யான் அன்றிப் பிறஅங்கில்லை.
மோனமும் பின் எண்ணமுமாய் மாறி மாற
முன்னதுமெய், பின்னது உயிர் என விளங்கும்.
மோனம் உயிர் மனம் மூன்றும் ஒன்றாய்க்காண
மோனதவம் கற்றாற்றி முனைப்பு ஒழிப்பீர்.