
மோனம்
விளக்கமும் – பழக்கமும்
பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னை
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி
பேசா நோன்பைக் கலைத்துப் பேசவைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்.
பேசாநோன் பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே.