
சிவம் – சக்தி
அகன்றநிலை, சுத்தவெளி, ஆதி, பிரம்மம்
அதுசிவமாம் மெய்ப்பொருளாம் பூரணமாம்
அகன்ற அதே முற்றறிவுமாகும் உள்ளுள்
அடங்கி நின்றவேகமது நுண்ணியக்கம்
அகன்ற ஒன்றின் பகுதிநிலை ஆகாசம் ஆம்
அசைவு தற்சுழலாகி விரைவாய் ஆற்றும்
அகன்றசிவம் ஆகாசம் இரண்டின் கூட்டு
அனைத்துலகும் பேரியக்க மண்டலம் ஆம்.