
உடற்பயிற்சி மாத்திரமே யோக மல்ல;
உளப்பயிற்சி அற்புதங்கள் வேத பாடம்
கடற்கரையில் மலைகாட்டில் உடல் வருத்தும்
கடும் மூச்சுப் பயிற்சி மட்டும் யோகமல்ல;
படர்க்கையினால் மனம் அலையா விழிப்பில் நிற்கப்
பண்படுத்தும் பயிற்சிகளாம் இவை பிறவித்
தொடரறுக்கும் தூய வினையாற்றும் பண்பாம்
துயர்களைந்து நிறைவளிக்கும் வாழ்வே யோகம்.