
இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் தெய்வம்
இயக்கநிலை அணுமுதலாய் அண்ட பிண்டம்
இயற்கையின் உணர்வுநிலை அறிவு ஆகும்.
இம்மூன்றைப் பிரித்துப் பேசும் சித்தாந்தம்
இயற்கையே அனைத்துமாய் உள்ளதென்று
எடுத்துரைக்கும் வேதாந்தம்; வெவ்வேறல்ல.
இயற்கைஎது? நான்யார்? என்றகத்தே நோக்க
எண்ணியவன் ஒடுங்கும்போது இரண்டும் ஒன்றே.