
மெய்ப்பொருளாம் அறிவிற்கு மூலமான
மேன்மை யறிந்து அப்பொருள்தான் என்றும் எங்கும்
எப்பொருளிலும் எல்லா உயிர்களோடும்.
இயங்குங்கால் அழுத்தம், ஒலி, ஒளி, சுவைகள்,
செப்பு மணம், எண்ணம் என்ற ஆறாய் ஆற்றும்
சிறப்புகளை வினைவிளைவை உணர்ந்துவாழும்
ஒப்புவமை யற்ற நெறி ஒழுக்கம், ஈகை
உயர்கடமை பிறழாத வாழ்வே யோகம்.