
ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் உள்ளுணர்வு பெற்றோர்கள்
உடல்நலமும் மனவளமும் உயர்அறிவும் பெறுவார்கள்
அழுக்காறு அவா வெகுளி அனைத்து களங்கம் மறையும்
ஆன்மீக உணர்வு மிகும் அறிவறியும் பேறுகிட்டும்
வழுக்காமல் நந்நெறியில் வாழ்வார்கள் அவர் தொண்டு
வாழ்மக்கள் அனைவர்க்கும் வழி காட்டியாய் அமையும்
பழக்கத்தால் நல்வினையே ஆற்றுவதால் உலகுக்கு
பயனுடைய செயல் பலவும் எளிதாகும் அவர் வாழ்வில்