
நிறைவாக அமைதியொடு வெற்றி கண்டு வாழ
நிலஉலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும் பால்உறவும் மதிப்போடு
உழைத்துப்பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று பற்றி வாழ வேண்டும்