
இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன்நிலை இதையுணர
இருள்நிலைக்கு மனமடங்கி ஈசனோடு ஒன்றாகி
இணைந்த பின்னே உணர்வதுதான் மெய்ப்பொருள் உணர்வாம்
இருள்நிலையை உணர்வதற்கும் பொருள் வடிவம் மனம் கொண்டால்
எவ்வாறு பொருந்துமது எண்ணமின்றி மனம் ஒடுங்கி
இருளாகி பழகுவதற்கு ஏற்றவழி உயிர் உணர்வே
இந்த மறைபொருள் உணர்த்த குருஅடி தொடர்வீர்.