
அகத்தவ மன்றம்
தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால்
சாட்சியுண்டு பேராசை சினம் பொறாமை
என்கருத்தும் செயல்களுமே நீதியென்று
எண்ணல் பிறர் வருத்தத்தில் இன்பம்காணல்
புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து
புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார்
வன்மனத்தோடெப் போதும் வெறுப்புணர்த்தும்
வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம்.