
உணர்ந்தோர் சிலர் உணராதோர் பலர்
உணர்ந்தோர் மற்றனைவரையும் ஏற்றுக்கொள்வார்
உணராதோர் உணர்ந்தவரை எதிர்த்து நிற்பார்
உணர்ந்தவர்கள் எதிர்ப்பவரைக் கெடுக்க மாட்டார்
உணராதோர் உணர்ந்தவரை அழிக்கப் பார்ப்பார்
உணர்ந்தவர்கள் சிலர் உலகில் உணராதோர்கள்
உளர் பலரே இந்த நிலை காலப்போக்கால்
உணர்ந்தவர்கள் எண்ணிக்கை உயருமட்டும்
உணராதோர் பழிச் செயலே ஓங்கி நிற்கும்