
கருத்து வேறுபாடுகள்
தேவை பழக்கம் அமையும் சூழல் தன்மை
திருந்தி உயரும் அறிவு நான்குக் கேற்ப
தேவையுணர்வில் நீதி அளவு தன்மை
தேர்ந்தெடுக்கும் காலம் இவை மனம் மதிக்கும்
தேவைகளில் உணர்ச்சிவய மானோர் தம்மைத்
திருத்த முடியாத துதவி மட்டும் செய்வோம்
தேவைகளை யறிந்தொழுகி நல்வாழ்வுக்குத்
திரும்ப நினைப்போர் கட்கே திருத்தம் சொல்வோம்