
வித்துக்கு வித்தே அருட்பேராற்றல்
பறவைகளின் காலடியின் அடையாளத்தைப்
பார்க்க முடியாது நாம் ஆகாயத்தில்
துறவிகளின் அறிவு நிலை உயர்வை மற்றோர்
தெரிந்து கொள்ள முயற்சித்தால் அதுவும் ஆகா
திறவுகோல் இல்லாமல் பூட்டு ஒன்றைத்
திறப்பதுவும் மிகக் கடினம் இவற்றைப் போன்றே
பிறவியதன் முன்பின்னாம் நிலையைப் பற்றி
பேச விளக்கக் கடினம் மொழியின் மூலம்