29 June 2026

அறிவின் உயர்வில் பல படிகளில் மக்கள்

தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை

தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுக் கேற்ப

நாவை மனத்தைச் செயலைப் பயன்படுத்தும்

நற்பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்

சேவை செய்ய முன்வருவோர் சமுதாயத்தில்

தியாகம் விட்டுக் கொடுத்தல் பொறுமை அன்பு

யாவையும் தன்னியல்பாய்ப் பழகிக் கொண்டு

எவ்வுயிர்க்கும் கருணையொடு ஈகை செய்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top